தண்ணீரில் மூழ்கினால் எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் கிராமத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹரிகிரன் பிரசாத், ஊர் காவல் படை அதிகாரி பிரகாஷ் குமார், மைதிலி சுந்தரம், இன்ஸ்பெக்டர் மீனா, பேரூராட்சி தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் ரோகினி அய்யப்பன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் பொது மக்களுக்கு குளத்தில் விழுந்து உயிருக்கு போராடும் நிலையில் உள்ள நபரை காப்பாற்றுவது எப்படி? முதல் உதவி செய்வது எப்படி என்பது குறித்து செய்து காட்டியுள்ளனர்.