நபர் ஒருவர் பூனையை வைத்து குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது என்று விளக்கிய வீடியோ தற்போது வைரலாகிறது.
பிறந்த கைக்குழந்தையை எப்படி குளிக்க வைப்பது என்று பூனையை வைத்து சோதனை செய்த நபரின் விடியோவானது ஆரம்பத்தில் டிக்டாக்கில் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் குளிப்பாட்டப்படும் அந்த பூனை மிகவும் அமைதியாக அமர்ந்த வண்ணம் கேமராவை பார்ப்பது தான் விடீயோவின் அழக.
வின் க்வாங் பாம் என்ற நபர் தான் தாத்தாவாக போகும் நிலையில் தன்னுடைய மகனுக்கு தன் குழந்தையை எப்படி குளிக்க வைப்பது என்று இந்த வீடியோ மூலம் விளக்கியுள்ளார். ஆனால் இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்தப் பூனையை கண்டு தான் வியப்பில் ஆழ்ந்துள்ளனர் வீடியோ முடியும் வரை அந்த பூனை வின் இக்வாங் சொல்லும் அனைத்தையும் அமைதியாய் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருக்கிறது.