Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி தான் விண்ணப்பிக்க வேண்டும்…. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் காலியாக உள்ள 4 விடுதிகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!!

மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1 மாணவர் விடுதி, 3 மாணவிகள் விடுதி என மொத்தம் 4 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் சேர்வதற்கு விரும்பும் மாணவர்-மாணவிகள் அந்தந்த விடுதி காப்பாளரிடம் விண்ணப்பங்களை பெற்று அதில் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்களது புகைப்படத்தை ஒட்டி கல்வி நிறுவனங்களில்  கையொப்பம்  பெற்று அந்தந்த விடுதி காப்பாளரிடம் வருகின்ற 5-ஆம்  தேதிக்குள் கொடுக்க வேண்டும். மேலும் விடுதியில் சேரும் மாணவ-மாணவிகளின் பெயரில் கட்டாயமாக வங்கி கணக்கு இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |