நெல்லையில் கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் அசாருதீன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வண்ணார்பேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.