பெரம்பலூரில் வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீச்செருவாய் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள் என்ற தாய் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவரும் சின்னாறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் ரஞ்சித்குமார், பச்சையம்மாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பச்சையம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதையடுத்து ரஞ்சித்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.