நெல்லையில் கார் மோதி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தில் கூலித் தொழிலாளியான ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் நாங்குநேரியிலிருந்து திசையன்விளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளுக்கு எதிராக வந்த கார் ராமமூர்த்தி மீது பலமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வடக்கு விஜயநாராயணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.