Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென வந்த தேனீக்கள்… மூச்சை விட்ட முதியவர்..!!

சிவகங்கை அருகே தேனீக்கள் கொட்டி முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் சின்னையா, சோலையன், சரோஜா ல், செல்லத்துரை ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று தேடி கூட்டிலிருந்து கூட்டமாக வந்த தேனீக்கள் இவர்கள் நான்கு பேரையும் மோசமாக கொட்டியுள்ளது. இதனால் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்பின் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சின்னைய்யா (வயது 70) மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |