Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் அருண்பாண்டி (30) என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு பின் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அருண்பாண்டி கடந்த 24-ஆம் தேதி வேலை காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் அத்தியூர் குடிகாடு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இதையடுத்து மோட்டார் சைக்கிள் வயலூர் கூட்டுறவு வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறியதில் அருண்பாண்டி கீழே விழுந்தார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குன்னம் காவல்நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |