சிவகங்கை இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் தெட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தெட்சணாமூர்த்தி இளையான்குடி கண்மாய் கரை பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக தொழிலாளி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது.
இதில் தெட்சணாமூர்த்திக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனை கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து இளையான்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.