Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… எலக்ட்ரீசியனக்கு நடந்த விபரீதம்… நாகையில் கோர சம்பவம்..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனாஈஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக தீனாஈஸ்வரன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தீனாஈஸ்வரனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீனாஈஸ்வரன் ஏற்கனவே இறந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீழையூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் பகுதியில் வசித்து வரும் வீரையன் என்பவரது மகன் வீரபாண்டி என்று தெரியவந்தது. வீரபாண்டியனுக்கும் இந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |