பெரம்பலூரில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு ரோடு எதிரில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டனர். இந்த விபத்தில் 2 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதனை கண்ட சிலர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஆறு பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்