Categories
தேசிய செய்திகள்

இப்படி நடிச்சுட்டு ஹீரோயினாக நடிப்பது கஷ்டம்…. ராஜ்யசபாவில் சிரிப்பலை…..!!!!!

பாஜவை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்யசபாவில் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது, அக்டோபர் 1 முதல் வாகனங்களில் 6 ஏர் பேக்குகள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பயணியர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இவற்றில் 1.50 லட்சம் நபர்கள் உயிரிழக்கின்றனர். சென்ற 2020-ல் மட்டும் நடந்த சாலை விபத்தில் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஆனால் ஏர் பேக்குகள் இருந்திருந்தால் 30% உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் குறுக்கிட்ட பாஜக -எம்பியும், நடிகையுமான ரூபா கங்குலி, “புதிய கார்களில் பொருத்தப்படும் தொழில் நுட்பங்களை பழைய கார்களிலும் பொருத்த முடியும் அல்லவா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கட்கரி “யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை, தவறாக எண்ணவேண்டாம். சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக நடித்தவர்கள், துணை நடிகர்களாக நடித்த பிறகு மீண்டும் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பது கடினம” என்று கூறினார். இவருடைய பதிலால் ராஜ்யசபாவில் சிரிப்பலை கேட்டது. அமைச்சர் நிதின் கட்கரி, பசுமை ஹைட்ரஜனால் செயல்படும் மின்சார காரில் பார்லி., வந்தார். அப்போது “பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா சீக்கிரம் உருவாகும்”  என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |