Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி படுத்தால் நினைத்தது நடக்கும்…! நேர்த்தி கடன் வினோதம்… தர்மபுரியில் நடந்த திருவிழா …!!

தர்மபுரி மாவட்டம் பெரியம்பட்டி பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரையில் புரண்டு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

பெரியாம்பட்டி அடுத்துள்ள ஏ. சப்பானிப்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்வது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற இந்த விழாவில், அம்மன் கரகத்தை தூலால் ஆற்றங்கரையில் வைத்து ஒரு பகுதியில் ஆண்களும், மற்றொரு பகுதியில் பெண்களும் அமர்ந்து கொண்டு சக்தி அழைப்பு விடுத்தனர்.

அப்போது கரகம் எடுத்து செல்வர் தரையில் நடந்து செல்லாமல் பக்தர்கள் அனைவரும் தரையில் படுத்துக் கொண்டனர். இதை தொடர்ந்து கரகம் எடுத்து செல்பவர் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு தரையில் படுத்திருக்கும் பக்தர்கள் மீது நடந்து சென்றார். அவ்வாறு நடந்து சென்றால், நினைத்த காரியம் நடக்கும் என்பதால் பக்தர்கள் தரையில் படுத்துக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

Categories

Tech |