Categories
தேசிய செய்திகள்

இப்படி பணம் எடுத்தால் GST இல்லை…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்….!!!!

வங்கியில் பணம் எடுக்கவே GST வசூலிக்கப்படுவதாக சமீபத்தில் சமூகவலைதளங்களில் சில தகவல்கள் பரவியது. இதன் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது “GST வரிவிதிப்பு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் உண்மையான தகவல்கள் சென்றடைவதில்லை. இதுபற்றி நான் தெளிவுபடுத்துகிறேன்.

அதாவது வங்கியிலிருந்து பணம்எடுப்பதற்கு GST இல்லை. பிரிண்டிங் நிறுவனங்களிடமிருந்து வங்கிகள் பெறக்கூடிய காசோலை புத்தகங்களுக்கு மட்டுமே GST விதிக்கப்படும். வாடிக்கையாளரிடமிருந்து வங்கி பணத்தை பெற்றாலும், வங்கியிலிருந்து வாடிக்கையாளர் பணம் எடுத்தாலும் அதற்கு GST இல்லை. மேலும் சுடுகாட்டுக்கும் GST விதிக்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பரவிய சில செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் சுடுகாட்டுக்கும் GST விதிக்கப்படுவதாக ஜிஎஸ்டி கவுன்சில் மீது குற்றம்சாட்டுகின்றனர். இதற்கிடையில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும், தகனம் செய்வதற்கும் வரி கிடையாது. புது சுடு காடு கட்டமைப்பதற்கான ஒப்பந்த பணிகளுக்கு GST உண்டு. அத்துடன் சில்லறை பணவீக்கம் சுமார் 7 சதவீதம் ஆக இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த களஅளவிலான தகவல்களின்படி நடவடிக்கை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.

Categories

Tech |