இந்திய வீராங்கனை மான்கட் முறையில் அவுட் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீராங்கனை டீன் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரலாகி வருகிறது..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் 3 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 1 -2 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் அணியிடம் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரை வென்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது..
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா இருவரும் களமிறங்கினர்.. இதில் ஷபாலி வர்மா 0 ரன்னில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த யாஷ்டிகா பாட்டியா 0, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4, ஹர்லின் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி 29 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து ஸ்மிருதி மந்தனாவுடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுமையாக ஆடியது. மந்தனா (50 ரன்கள்) அரை சதம் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க மறுமுனையில் தீப்சி சர்மா கடைசி வரை நின்றார்.. இறுதியில் இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தீப்தி சர்மா 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் கிராஸ் 4 விக்கெட்டுகளும், கெம்ப் மற்றும் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய எம்மா லாம்ப் 21, பேமவுண்ட் 8 என இருவரையும் ரேணுகா சிங் அவுட் செய்தார்.. அதனை தொடர்ந்து வந்த ஆலிஸ் கேப்ஸி 5, டேனி வியாட் 8, சோஃபி எக்லெஸ்டோன் 0, கெம்ப் 5, கிராஸ் 10 என அனைவரும் சீரான இடைவெளியில் சொற்ப ஆட்டம் இழந்தனர். இதனால் 35.2 ஓவரில் 118/9 விக்கெட் இழந்திருந்தது இங்கிலாந்து மகளிர் அணி.அப்போது சார்லி டீனுடன், டேவிஸ் ஜோடி சேர்ந்தார்.
இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 44ஆவது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.. அந்த ஓவரின் 3ஆவது பந்தை தீப்தி வீசுவதற்கு முன்பாகவே நான் -ஸ்ட்ரைக்கில் இருந்த சார்லி டீன் கோட்டை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயல, அவர் மன்கட் முறையில் ரன் அவுட் செய்து அம்பெயரிடம் அவுட் கேட்டார்..
இதையடுத்து 3ஆவது நடுவரிடம் கேட்கப்பட, டிவி ரீபிளேவில் அவுட் என வந்தது.. இதனால் 47 ரன்கள் எடுத்திருந்த டீன் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.. டேவிஸ் 10 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத டீன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.. அவரை சக வீரரான டேவிஸ் தேற்றுகிறார்.. இந்த அவுட்டால் பெவிலியனில் இருந்த இங்கிலாந்து வீரர்களும் சற்று அதிர்ச்சியடைந்தனர்.. இதனால் 43.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.. இதனால் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..
இதேபோல ஐபிஎல்லில் பட்லரை தமிழக வீரர் அஸ்வின் அவுட் செய்திருப்பார்.. அது தற்போது நினைவுக்கு வருகிறது.. இதுகுறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. சிலர் பாராட்டினாலும் சிலர் ஒருமுறை அவரை எச்சரித்திருக்கலாம் இப்படி அவுட் செய்திருக்க கூடாது என்று கூறி வருகின்றனர்..
அதில் ஒருவர், மான்கட் முற்றிலும் சட்டப்பூர்வமானதாக இருக்கலாம், ஆனால் நான் அதை நேர்மையற்றதாகக் காண்கிறேன்”. இது கிரிக்கெட்டின் உத்வேகத்தை பெரிய அளவில் காயப்படுத்துகிறது. இந்தியா தகுதியுடன் இங்கிலாந்தை வென்றது மற்றும் ஒயிட்வாஷ் செய்தது (#ENGvIND), ஆனால் லார்ட்ஸில் தீப்தி ஷர்மாவின் தந்திரமான ரன் அவுட் நன்றாக இல்லை என்று தெரிவித்துள்ளார்..
Here's what transpired #INDvsENG #JhulanGoswami pic.twitter.com/PtYymkvr29
— 𝗔𝗱𝗶𝘁𝘆𝗔 (@StarkAditya_) September 24, 2022
“Mankad might be purely Legal, but I find it sheer Unethical”. It hurts the Spirit of Cricket in big way.
India deservingly won & whitewashed England(#ENGvIND), but the tricky Run Out(w/o warning) by #DeeptiSharma in Lords didn’t look good. Female Ashwin could have done better. pic.twitter.com/krJuVuMOkp
— Kumar D (@aka_dpu) September 24, 2022
இதற்கிடையே இந்தப் போட்டியுடன் இந்தியாவின் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/okrajasingh/status/1573766844028424192
https://twitter.com/HarryJo89360061/status/1573726760126259201
Few things never changed..😂
Deepti sharma you beauty..#DeeptiSharma #ENGvsIND #Ashwin pic.twitter.com/Vt8N2fTqUg— Pawan (@pawankumarindo) September 24, 2022
https://twitter.com/Abhicricket18/status/1573726158830866432
https://twitter.com/Kaaf_sayzz/status/1573739807095898114
https://twitter.com/AhmadCricVlogs/status/1573755071648735232