நடிகர் அஜித் ஆரம்ப காலத்தில் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளகள் வறுமையில் இருக்கும் போது பாலிவுட் தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து வருவது அதிருப்தியை எற்படுத்தயுள்ளது.
நடிகர் அஜித் என் வீடு என் கணவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதற்குப் பின்னர் 1993-ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் இன்று கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மேலும் நடிகர் அஜீத்துக்கு திருப்புமுனையாக ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி உள்ளிட்ட படங்கள் இருந்தன. குறிப்பாக வாலி படத்தில் வில்லனாகவும், ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை மிரட்டி இருந்தார். அந்தளவுக்கு எக்ஸலென்ட் பர்ஃபாமன்ஸ் கொடுத்திருந்தார் நடிகர் அஜித்.
மேலும் நடிகர் அஜித் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இதற்கு காரணம் ஆரம்ப காலத்தில் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் தான். ஆனால் அஜீத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் தூக்கி விட்ட தயாரிப்பாளர்கள் தற்போது வறுமையில் இருக்கின்றனர். அந்தவகையில் அமராவதி படத்தின் தயாரிப்பாளரான சோழா பொன்னுரங்கம் தற்போது மீண்டு வர முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருகிறார். இதேபோல் காதல் கோட்டை படத்தின் தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியனும் தற்போது மேலே வரமுடியாதப்படி வறுமையில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அஜித் கோடிகளில் புரளும் பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து வருகிறார். இதனால் சில தயாரிப்பாளர்கள் அஜித் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தல என்று ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கப்படும் அஜித் தனக்கு வாய்ப்பு அளித்தவர்களையும் நினைவு கொண்டு அவர்கள் எழ உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.