ஒடிசா மாநிலம் உப்பர் கைசாலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காச நோய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி குடும்பத்தினர் செய்த செயலால் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், உப்பர் கைசாலி என்ற கிராமத்தில் அதிகமாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் வசித்து வரும் பிகாஸ் தேகுரி என்ற கூலி தொழிலாளிக்கு கடந்த சில நாட்களாக காசநோய் இருந்துள்ளது. இந்த நோயின் காரணமாக அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் சூடான இரும்பு கம்பிகளை வைத்து சூடு போட்டால் காச நோய் குணமாகிவிடும் என்று நம்பி, அவரது வயிற்றுப் பகுதியில் பல இடங்களில் இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளனர். இதனால் வயிற்றுப் பகுதியில் அதிக காயம் ஏற்படவே அவர் உயிரிழந்தார்.
வயிற்றில் சூடு வைக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்று தெரியவந்தது. மேலும் இவருக்கு திரௌபதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த கிராமத்திற்கு அருகே ஒரு இரும்புதாது சுரங்கம் உள்ளது. அதிலிருந்து வெளியாகும் மாசு காற்றானது அப்பகுதி மக்களுக்கு காசநோய் மற்றும் மூச்சுக்குழாய் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் அந்த பகுதியில் உள்ள சுரங்கத்தை யாரும் மூட வில்லை என்று தெரிவித்துள்ளனர். கடந்த 18 மாதத்தில் மட்டும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் காச நோயின் காரணமாக உயிரிழப்பதாக அவர் தெரிவித்தார்.