Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணா நிதி நெடுக்கடிதா வரும்?…. பிரதமரிடம் கவலை தெரிவித்த செயலாளர்கள்…..!!!!!

மாநில அரசுகளில் பணிபுரிந்து இப்போது மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள் உள்பட பல துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கரமான திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இலவசங்களை வழங்கும் அறிவித்துள்ள சில மாநிலங்கள், இலவச திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இலங்கை மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது போன்ற பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என்றும் பல்வேறு மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் அவர்களுக்கு மத்திய அரசு உதவாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் எச்சரித்தனர்.

இதற்கிடையில் பஞ்சாப், தில்லி, தெலங்கானா, ஆந்திரம், மேற்குவங்கம் போன்ற மாநில அரசுகள் அறிவித்துள்ள இலவச திட்டங்கள் பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாதவை எனவும் , பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் அரசியல் தேவைகளை சீரமைக்கும் ஒரு சமநிலையான முடிவை எடுப்பதற்கு அவர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினர். தேர்தலின்போது அரசியல் கட்சிகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட இலவசங்கள் தொடர்பாக கவலை தெரிவித்த அதிகாரிகள், மாநிலத்தின் நிதி நிலைமையை சீரமைக்காமல் இலவச திட்டங்களை தொடர்ந்தால் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் திட்டத்துக்கு மாறியுள்ளதை அடுத்து அவை சந்திக்கவுள்ள விளைவுகள் தொடர்பாக அச்சம் தெரிவித்த மத்திய அரசு அதிகாரிகள்,  ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வருகிற அரசியல் கட்சிகளால் நாட்டின் நிதி நிலைமைகளில் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இலவச மின்சாரத்தினை தொடர்ந்து வழங்கிட பல்வேறு அரசியல் கட்சிகள், மாநில நிதிநிலை அறிக்கையில் அழுத்தத்தை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய முக்கிய சமூகத் துறைகளுக்கு அதிகநிதிகளை ஒதுக்க முடியாமல் போய் விடுகிறது என்று கூறினர். அதனைத்தொடர்ந்து சமூகப்பொருளாதார மேம்பாட்டின் மீது கவனம் செலுத்தவது, வறுமையைக் குறைப்பது, மாநில மற்றும் மத்திய அரசில் பெற்ற அனுபவத்தின்படி முன்னேற்றத்திற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு செயலாளர்கள், அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |