Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி பண்ணிட்டாரே….! சர்பிரைஸ்ன்னு சொல்லிட்டு…. ஓரியோ பிஸ்கட் காட்டிய தோனி…!!!

கேப்டன் தோனி திடீரென்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நேரலையில் அனைவரோடும் உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனால் அவர் ஓய்வு அறிவிக்கப் போகிறாரா? அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் இன்று சொன்னபடி பகல் 2 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டோனி ஓரியோ பிஸ்கட் ஒன்றை அறிமுகம் செய்துவிட்டு எழுந்து சென்றார்.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த பிராண்ட் 2011ல் அறிமுகம் செய்யப்பட்டபோது இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இன்றைய பிராண்ட் விளம்பரத்தில் இதை கூறிய அவர் இந்தியா மீண்டும் உலக கோப்பை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |