Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணிட்டியே….! கூகுள் மேப்பால்…. வயலுக்குள் சிக்கிய கார்….. என்ன நடந்தது தெரியுமா….????

கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள ஒரு குடும்பத்தினர், பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சரியான வழி தேடி, கார் ஓட்டும் நபர் கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். அது காட்டும் திசையை நம்பி இரவு முழுவதும் காரை ஓட்டியுள்ளார். அப்போது, பாலச்சிரா என்ற பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் அந்த கார் இறங்கியது.

இதையடுத்து அவர்கள் காரை விட்டு இறங்கி, காரை இழுக்க முயற்சித்தனர். ஆனால் காரை வெளியே எடுக்க இயலவில்லை. உடனே வேறு வாகனத்தை பிடித்து சென்ற அவர்கள் மறுநாள் காலை, ஊர் மக்களின் உதவியோடு வயலில் இருந்த காரை கயிறுகட்டி இழுத்து மீட்டனர்.

Categories

Tech |