கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வெற்றிகரமாக பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் முதல் 2 வாரங்கள் முடிந்து விட்டது. இதற்கிடையில் மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினார். மேலும் முதல் போட்டியாளராக சாந்தி வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் அசல் வெளியேறினார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை சுற்றி சுற்றி வருவது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. தற்போது வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். அதில் ரக்ஷிதா சாதம் வடித்துக் கொண்டிருக்கிறார். அதிலிருந்து கிளம்பும் ஆவியானது கேமரா மீது படுகிறது. இதனையடுத்து ராபர்ட் மாஸ்டர் கேமராவை கையால் மறைத்து அதில் ஆவி படாதவாறு பாதுகாக்கின்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் ரக்சிதா முகத்தில் ஆவி படாமல் பாதுகாப்பார் என்று பார்த்தால் அவர் கேமராவை பாதுகாக்கின்றாரே என்று கலாய்த்து வருகின்றனர்.
#RobertMaster ❤ #Rachitha #RRR (Robert Rachitha Rowsu)#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/RqRr7tazS1
— DAVID BALA (@DAVIDBALA333) October 31, 2022