செயற்கைக்கோளுக்கு எதிரான ஆயுத சோதனையை ரஷ்யா நடத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ரஷ்யாவின் இந்த செயல்பாடுகள் விண்வெளியின் அமைதியான நிலைப்பாட்டை அச்சுறுத்துவதாகவும் செயற்கைக்கோள்கள் மற்றும் உலகம் சார்ந்திருக்கும் விண்வெளி அமைப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மேலும் இங்கிலாந்தின் விண்வெளி மையமும் இது போன்ற எந்த ஒரு சோதனைகளையும் ரஷ்யா எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கேட்டு கொள்கிறோம் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் குற்றச்சாட்டை நிராகரித்த ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சக நாடுகள் பொய்யான தகவல்களை பரப்பும் வகையில் செயலாற்றக் கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு தான் சோதனை நடைபெற்றதாகவும் இந்த விவகாரத்தில் நிதானமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தெளிவு பெற வேண்டும் எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.