Categories
அரசியல்

இப்படி பூஜை செய்ய விதிமுறை உள்ளதா….? அதிகாரிகளிடம் எகிரிய திமுக எம்பி…. அதிருப்தியில் முதல்வர் ஸ்டாலின்…..!!!!!!!!

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக அல்ல என்பதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அந்த கட்சி தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறநிலையத்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் திட்டப்பணிகளுக்கு பூஜை போடுதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்து வந்தது. வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் பானையை உடைத்த கதையாக தர்மபுரியை சேர்ந்த திமுக எம்பி செந்தில்குமார் நேற்று முன்தினம்  செய்த விவகாரம் பொதுமக்கள் மட்டுமல்லாமல் திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் ஆலப்புரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி  இருக்கிறது. இந்த ஏரியை மத்திய அரசின் திட்டத்தில் புனரமைக்க  1.37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. பணியை தொடங்கி வைக்க வந்த தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் அங்கு பூமி பூஜை செய்ய புரோகிதர் வரவழைக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை கண்டு கோபமடைந்தார். அரசு விழாவில் ஹிந்து முறைப்படி பூஜைகள் நடக்கக்கூடாது. இப்படி பூஜை செய்ய விதிமுறை இருக்கிறதா என அதிகாரிகளிடம் எகிறி உள்ளார். இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் அவரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் பூஜை பொருட்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் அதிகாரிகள் திமுகவினர் என அனைத்து தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக எம் பி செயலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இதை அடுத்து தொப்பூர் பவானி இரு வழி சாலை பூமி பூஜையில் எம்பி செந்தில் குமார் பங்கேற்ற புகைப்படம் பல்வேறு அரசு விழாக்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த சூழலில் திமுக எம் பி யின் செயல்பாடு அந்த கட்சி தலைமைக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்துக்களுக்கு எதிரான திமுக இல்லை என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சி செய்து வரும் நிலையில் எம் பி செந்தில்குமரன் செயல்பாடு திமுகவின் ஒட்டு வங்கியையும் சுக்கு நூறாக்கும் செயலாக அமைந்துள்ளதாக அந்த கட்சியினரே  நொந்து போய் இருக்கின்றார்கள். இதனால் திமுக எம்பி செந்தில்குமார் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |