ஆற்று மணல் கடத்த முயன்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ள பகுதிக்கு சென்று கிராம நிர்வாக அலுவலர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாக்குப்பையில் திருடிய ஆற்று மணலை மொபட்டிலில் வைத்து 2 வாலிபர்கள் கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.அதன் பின்பு கிராம நிர்வாக அலுவலரை பார்த்தவுடன் அந்த இரண்டு வாலிபரும் மொபட்டை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மணல் மூட்டை மற்றும் மொபட்டை பறிமுதல் செய்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். இதனைதொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் மணல் திருட முயற்ச்சி செய்தவர்கள் குமாரபாளையத்தில் வசித்து வரும் அஜித் குமார் மற்றும் மோனிஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அஜீத் குமாரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான மோனிஷை வலைவீசி தேடி வருகின்றனர்.