சிம்புவின் புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அவரது புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.இந்நிலையில் நடிகர் சிம்பு இந்த லாக் டவுன் காலத்தில் ஒரு புதிய மனிதராக மாறியுள்ளார் .
அவரது உடல் எடையை கிண்டலடித்தவர்களுக்கு பதில் கூறும் வகையில் எடையை குறைத்துள்ளார் .அதோடு மீசை பெரிய தாடி என வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். டுவிட்டரில் சிம்பு வெளியிட்ட அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.