தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை கொரோனா பாதித்த 85,915 பேர் மீண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 1,898ஆக அதிகரித்துள்ளது. அதே போல 46,410 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 76,158ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 1200க்கும் கீழ் பாதிப்பு வந்து ஒரு மாதம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.