மதுரையில் மர்ம நபர்கள் பூட்டிய கடையில் திருடிச்சென்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பாரதியார் தெருவில் மணிரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் எஸ்.எஸ் காலணி பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றதைப் பயன்படுத்திய மர்ம நபர்கள், அவரது கடையின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 81,000 ரூபாயை திருடி சென்றனர்.
இதனையடுத்து கடைக்கு சென்ற மணிரத்தினம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் எஸ்.எஸ் காலணி காவல் நிலையத்தில் திருட்டு குறித்து புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.