Categories
தேசிய செய்திகள்

“இப்பல்லாம் சிங்கம் கூட பாத்ரூம் யூஸ் பண்ணுது போல”… கழிப்பறைக்குள் சிங்கம்… வைரலாகும் வீடியோ…!!!

பொது கழிப்பறையில் இருந்து சிங்கம் ஒன்று வெளியே வந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பொதுவாக நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நாம் பயிற்சி அளிப்பது வழக்கம். பலரும் தங்கள் வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். அவைகளுக்கு எப்படி கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படுகின்றது. ஆனால் காட்டு விலங்கு அப்படி பயிற்சி அளிக்க முடியாது. ஆனால் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சிங்கம் பொது கழிப்பிடத்தில் இருந்து வெளியே வருவது போல் உள்ளது.

இதை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வைல்டு லென்ஸ், எக்கோ பவுண்டேஷன் என்ற பெயரில் உள்ள டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சிங்கமொன்று கழிப்பிடத்தில் இருந்து வந்து வெளியே எட்டிப் பார்க்கிறது. அதை பகிர்ந்த அவர் பொதுக்கழிப்பிடம் என்பதால் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என நினைக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பலராலும் பகிர்ந்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிங்கத்தின் பகுதியில் டாய்லெட் கட்டினால் இப்படித்தான் நடக்கும் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Categories

Tech |