Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்பவும் உழைக்க ஆசைப்படுகிறேன்” கண்ணீர் விட்ட வடிவேலு….. வைரலாகும் வீடியோ…..!!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் வடிவேலு. இந்நிலையில் தற்போது புது படங்களை பார்க்க முடியவில்லை. மேலும் சினிமா தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் கூட அவர் கலந்து கொள்வதில்லை. இந்நிலையில்தான் திரையுலகினர் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வந்தபோது அதிசயமாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் வடிவேலு மெலிந்து காணப்பட்டதை பார்த்த பலருக்கும் சற்று அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் கர்ணன் படத்திலிருந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற பாடலை பாடும்போது வடிவேலு கண்கலங்கியது. அதைப்பார்த்த அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. மேலும் அவர் பேசுகையில், “நீங்கள் எல்லோரும் ஒரு வருஷம் தானே லாக்டவுனில் இருந்தீர்கள். ஆனால் நானோ பத்து வருஷமாக லாக்டவுனில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். என்னுடைய உடம்பில் தெம்பு இருக்கிறது. படங்களில் நடிக்க ஆசை இருக்குது. யாருமே அதற்கு வாய்ப்பு கொடுப்பதில்லை, என்னை கூப்பிடுவதில்லை. வீட்டிலேயே முடங்கி கிடப்பது எவ்வளவு ரணம் தெரியுமா என்று உருக்கமாக பேசியுள்ளார்.

வடிவேலு படத்தில் வராவிட்டாலும் அவரை ரசிகர்கள் யாரும் மறக்கவில்லை. திரும்பும் பக்கமெல்லாம் வடிவேலு மீம்ஸ் தான். தற்போது பெட்ரோல் விலை உயர்வில் வடிவேலு புகைப்படங்கள் வீடியோக்களை வைத்து தான் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 40 படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |