Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்பவே இப்படி பண்றாங்க…. வாலிபர்கள் செய்யும் காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தனியாக நடந்து சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள வண்டிக்கார முருகையா தெருவில் சேதுபதி ராஜா (27) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் காட்டூரணியில் பணிக்கு சென்ற சேதுபதி ராஜா மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது குறத்தி அம்மன் கோவில் அருகே வைத்து திடீரென 3 வாலிபர்கள் சேதுபதி ராஜாவை வழிமறித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சேதுபதி ராஜா உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து கேணிக்கரை காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சேதுபதி ராஜாவை மிரட்டிய வழுதூரை சேர்ந்த சுதர்சன் (22), சுபாஷ் (22), மோனிஷ்ராஜ் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |