பயன்பாட்டிற்க்கு தேவையான பொருட்களின் அவசியம் அதிகரிக்க, அதிகரிக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதற்காக பல அபாயகரமான வழிகளை கண்டறிந்து வருகிறது மனித இனம்.அதி ஒன்றுதான் பிராய்லர் கோழி..!
பிராய்லர் கோழிகளில் பயன்படுத்தப்படும் அளவுக்கு மீறிய ஆன்டிபயாடிக்ஸ் மூலம் மனித இனத்திற்கு ஏற்பட உள்ள பேராபத்தை விவரிக்கிறது இந்த இந்தக் குறிப்பு.
ஆட்டிறைச்சியின் விலையோ அதிகம், எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைப்பதில்லை. ஆனால் குறைந்த விலையில் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைக்கும் ஒரே இறைச்சி பிராய்லர் கோழி இறைச்சி தான். இதனால் நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் டன் வரை இந்தியாவில் பிராய்லர் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்படுகிறது.
இது வரும் 2022 ஆம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிராய்லர் கோழியின் உற்பத்தியில் இந்த இலக்கை எட்ட உற்பத்தியாளர்கள் கோழிகளுக்கு அளவில்லாமல் ஆன்டிபயாடிக் மருந்தை செலுத்துவதாக நீண்ட காலமாகவே குற்றசாட்டு இருந்து வருகிறது. இது பற்றிய பல புகார்கள் சென்றும், மத்திய, மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் எதிரொலி தற்பொழுது பிராய்லர் கோழிகளில் சூப்பர்பக்ஸ் கிருமிகள் அதிக வலிமையுடன் உருவெடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. சூப்பர்பக்ஸ் எனப்படுபவை வழக்கமாக பாக்டீரியாவிலிருந்து மாறுபட்ட ஒன்றாகும். இது நோய் பாதிப்புகளில் இருந்து பிராய்லர் கோழிகளை பாதுகாப்பதற்காக, உற்பத்தியாளர்கள் ஆன்டிபயாடிக் மருந்துகளை செலுத்துகின்றனர்.
ஆனால் கோழிகளில் உள்ள நீர்க்கோழி என்னும் சூப்பர்பக்ஸ் இந்த மருந்துகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதோடு, இந்த மருந்துகள் மூலம் அதிக வலிமை அடைகிறது. இந்த இறைச்சியை உட்கொள்ளும் பொழுது ஒருவரது உடலில் இந்த கோழிகள் எனப்படும் பாக்டிரியாக்கள் சென்றடைகின்றது. இதன் விளைவு எதிர்காலத்தில் நோய்வாய்ப்படும் பொழுது ஆண்டிபயாடிக் உட்கொண்டதால் , நம் உடலில் உறுப்புகள் செயல்படாமல் போய் விடுகிறது.
இதனால் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியாமல் இழக்க நேரிடும். அதுமட்டுமில்லை எதிர்காலத்தில் பெரும் தொற்றுநோய் ஏற்படும் பொழுது இந்த ஆண்டிபயாடிக் உபயோகம் இல்லாமல் போய்விடும், அதற்கு வழிவகுக்கும் என்றனர் மருத்துவர்கள். இந்த பேராபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்குத்தான் அதிகம் பாதிக்கின்றது.
ஆனால் இறைச்சிகளில் ஆன்டிபயாடிக்ஸ் உபயோகிப்பது என்பது அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அது அதிகம் எனும்பொழுதும், ஆசிய நாடுகளை விட்டு வைக்குமா என்றனர் ஒருசாரர். ஆனால் பிரச்சினை ஏற்படுவது அதுவல்ல பிராய்லர் கோழிகளில் செலுத்தப்படும் இந்த அளவுக்கு மீறிய ஆன்டிபயாடிக்ஸ் உபயோகிப்பதை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பிராய்லர் இறைச்சிகளில் காணப்படும் சூப்பர் பக்ஸ் கிருமிகள் மூலம் மனித குலத்திற்கு ஏற்படப்போகும் பேரழிவை கட்டுப்படுத்த முடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.