Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்போதான் மீண்டு வரோம்…. இப்படி விலை ஏத்துறீங்களே….? விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்…!!

அதிகரித்த பெட்ரோல் டீசல் கேஸ் விலையை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்.

கொரோன காலத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சிரமப்பட்டு கடந்து வந்த நிலையில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தை நம்பியிருக்கும் மக்கள் இந்த விலை ஏற்றத்தினால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த விலை ஏற்றத்தால் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருக்கிறார்கள். எனவே மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை சங்க பிரதிநிதிகள் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால் ரோட்டில் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Categories

Tech |