Categories
பல்சுவை

இப்போது இருக்கும் விமானம்….. “பழைய காலத்து விமானத்தை விட ஏன் வேகம் குறைவாக செல்கிறது”….. உங்களுக்கு தெரியுமா?…..!!!!

எதற்காக இப்போது இருக்கும் விமானங்கள் பழைய விமானங்களை விட வேகம் குறைவாக செல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதை பற்றி நாம் இதில் தெரிந்துகொள்வோம்.

விமானங்களில் பயணம் செய்வது என்பது நேரத்தை மிச்சப்படுத்துவது. இதில் பெரும்பாலாக பணக்காரர்கள் அதிக அளவு பயணம் செய்கின்றனர். மிடில்கிளாஸ் மக்கள் டிரெயின், பஸ் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் ஒரு முறையாவது நாம் விமானத்தில் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது ஒருபுறம் இருக்கட்டும். விமானத்தில் செல்வதற்கு மிக முக்கிய காரணம் என்றால் அது நேரத்தை மிச்சப்படுத்துவது. மற்ற வாகனங்களை ஒப்பிடும்பொழுது விமானம் மிக விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விடும். இதற்காகத்தான் விமானத்தில் பயணம் செய்யும் டிக்கெட்டின் விலை மிகவும் அதிக அளவில் உள்ளது.

1960 முதல் 1970 வரை இருந்த காலகட்டத்தில் விமானங்கள் அனைத்தும் இப்போது இருக்கும் விமானங்களை விட மிக விரைவாக பறக்குமாம். அதாவது தற்போது விமானத்தில் செல்லும் நேரத்தை விட மிக அதிக வேகமாக நாம் 1960 காலகட்டங்களில் விமானத்தில் சென்று விட முடியுமாம். நீங்கள் யோசிப்பீர்கள் அந்த கால டெக்னாலஜியை விட தற்போது தான் அறிவியலும் டெக்னாலஜியும் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் விமானம் குறைந்த வேகத்துடன் பறக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம்.

இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்றால் முன்பு இருந்த விமானங்கள் அனைத்தும் ஒரு மணி நேரத்திற்கு 565 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்லுமாம். ஆனால் தற்போது இருக்கும் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு 450 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றது. இதற்கு காரணம் என்னவென்றால் அதில் நிரப்பக்கூடிய எரிபொருள் என்று கூறுகின்றனர். விமானம் எந்த அளவிற்கு வேகமாக செல்கின்றதோ அந்த அளவிற்கு எரிபொருள் விரைவாக தீர்ந்துவிடும். இதன் காரணமாகவே தற்போது இருக்கும் விமான நிறுவனங்கள் அனைத்தும் எரிபொருளின் செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே குறைந்த வேகத்தில் விமானங்களை ஓட்டுகின்றனர் என்று கூறுகின்றார்கள்.

Categories

Tech |