இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் நியாமான கருத்துக்களை தைரியமாக பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது டுவிட்டரில், பெகாஸஸ் செயலின் மூலம் மத்திய அரசு ஒட்டுக் கேட்பதை விமர்சனம் செய்துள்ளார். ஆரோக்கிய சேதுவை பயன்படுத்த மத்திய அரசு ஏன் வற்புறுத்துகிறது என இப்போது புரிகிறதா? அவர்கள் பொய் சொல்வார்கள். உளவு பார்ப்பார்கள். அவர்களின் நடவடிக்கையை எதிர்த்து ஏன் என்று கேளுங்கள். கூடிய விரைவில் அவர்களை பை பை சொல்லி வீட்டுக்கு அனுப்புங்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.