தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என நடிகர் பிரேம்ஜி கூறியுள்ளார்.
பிரேம்ஜி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரனும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இவருக்கும் ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற பல படங்களுக்கு பின்னணி பாடல் பாடியுள்ள வினைய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதைப் பற்றி நடிகர் பிரேம்ஜி கூறும் போது, தனக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் அவ்வாறு செய்திருந்தால் பத்து வருடத்திற்கு முன்பே செய்து இருப்பேன். என் வாழ்வில் குழந்தைகள் திருமணம் போன்ற விஷயங்கள் கிடையாது. அதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.