நீங்களும் நிரூப்பும் எப்போது கல்யாணம் செய்து கொள்ள போகிறீர்கள் என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யாஷிகா அதிரடியான பதில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமான நடிகை யாஷிகா பிக் பாஸ் சீசன்2 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் மூலம் தன் வசம் நிறைய ரசிகர்களை கவர்ந்த யாஷிகா அந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும், 5 லட்ச ரூபாய் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார். அதன்பின்பு கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி யாஷிகா தனது தோழிகளுடன் பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது மிக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
இதில் அவருடைய தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த யாஷிகா தற்போது பூரண குணமடைந்து வீட்டிலிருந்தபடியே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு யாஷிகா அதிரடியான பதில் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது உங்களுக்கும் நிரூப்பிற்கும் எப்போது திருமணம் என்று யாஷிகா விடம் அந்த ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த யாஷிகா “தற்போது தனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமில்லை” என்று கூறியுள்ளார்.