Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ் ….!! இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை….!! மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜிம்கள் மற்றும் ஸ்பாகள் 50 சதவிகித திறனுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹரியானா மாநிலத்தில் முன்பை விட அதிக வேகத்தில் கொரோனா பரவி வருவதால் பள்ளிகளை திறப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அரசு வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் சுழற்சிமுறையில் 33 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் எடுக்கலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் புதிய நெறிமுறைகளை ஹரியானா அரசு வெளியிட்டுள்ளது .அவை பின்வருமாறு, ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் 50 சதவிகித திறனுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குறிப்பிட்ட 8 மாவட்டங்களுக்கு மட்டும் பேரணிகள் விழாக்கள் போன்றவற்றில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் மால்கள் மற்றும் சந்தைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். பால் கடை மற்றும் மருந்து கடை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான நிறுவனங்கள் மட்டும் 24 மணிநேரமும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு எப்போதும்போல கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |