வீடுகளை விட்டு வெளியே வராமல் 24 மணி நேரமும் பிரித்தானிய கிராமம் ஒன்றில் மக்கள் கதவுகளை மூடிக்கொண்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
பிரித்தானியாவில் உள்ள சில்வேர்ட்லே என்ற கிராமத்தின் ஒரு பகுதியில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் மனித கழிவு மற்றும் அழுகிய மாமிசம் ஆகியவற்றின் நாற்றம் தாங்கமுடியாமல் அங்குள்ள மக்கள் கதவு, ஜன்னல்களை டேப் மூலம் சீல் வைத்துக்கொண்டு வாழ்கின்றனர். மேலும் அவர்கள் துணிகளை காய போடுவதற்கும், பிள்ளைகளை வெளியில் விளையாடுவதற்கும் அனுமதிப்பதில்லை.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்பவர்கள் கூட கைக்குட்டையால் மூக்கை மூடிக் கொண்டுதான் செல்கின்றனர். அந்த குப்பை கொட்டும் இடத்தை நிர்வகிக்கும் ரெட் இண்ட்ஸ்ட்ரிஸ் என்ற நிறுவனம் பல புகாருக்கு பின் களிமண்ணை கொட்டி அந்த குப்பைகள் அந்நிறுவனம் மூடி வருகிறது. ஆனால் அவை முழுமையாகவில்லை. இதற்கிடையே அந்த நிறுவனம் 2026 வரை அந்த இடத்தை நிர்வகிக்க இருப்பதால் அங்கு வாழும் கிராம மக்களுக்கு தற்போது விடிவு காலம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.