பிரபல நடிகரான அபினய் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதாக பேட்டி ஒன்றில் கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார்.
“துள்ளுவதோ இளமை” படத்தில் தனுசுடன் இரண்டாவது ஹீரோவாக அபினய் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ஹீரோவாக இரண்டு படங்களில் நடித்தார். இருப்பினும் அவர் நடித்த படம் எதுவும் பெரிதளவில் வெற்றியைத் தேடி கொடுக்கவில்லை. மேலும் 8 படங்களுக்கு மேல் கைவிட்ட நிலையில், விளம்பர படங்களில் நடித்தும் அபினய்-க்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அபினய் அம்மாவும் எதிர்பாராதவிதமாக இறந்து விட்ட காரணத்தினால் அவர் வறுமையின் காரணமாக தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அபினய் பேட்டி ஒன்றில் “அனைத்து சொத்துக்களையும் விற்று விட்டேன் தற்போது அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டு வருகிறேன்” என்று கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார்.