Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்போ இது புதுசா” கிளம்பிருக்கு…. சொத்துத் தகராறில் மகள்கள்… வேதனையில் ரஜினி….!!

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே போயஸ் கார்டனில் வைத்து ரஜினியின் இரு மகள்களுக்கிடையே சொத்து தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் ஐஸ்வர்யா 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சொத்து தொடர்பாக ரஜினியின் இரு மகள்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷிற்கு போயஸ் கார்டன் மீது ஒரு கண்ணை இருந்த நிலையில் அதனை ரஜினி தனது இளைய மகளான சௌந்தர்யாவிற்கு எழுதி வைத்துள்ளார். இதனால் கடுப்பான தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் பிரச்சினை செய்துள்ளார். அந்த பிரச்சனையை சரி செய்ய ரஜினி போயஸ்கார்டனில் மற்றொரு வீடு கட்டும் படி தனுஷிடம் கூறியுள்ளார். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தினால் ஏற்கனவே மன வேதனையிலிருக்கும் ரஜினி தனது மகள்களுக்கிடையேயும் பிரச்சினை இருப்பதால் மிகுந்த கவலையிலுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |