பிரிட்டனின் இளவரச தம்பதியான ஹரி-மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டிக்கு புதிதாக மற்றொரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியில் ஒபரா வின்ஃப்ரே நடத்தும் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி பேட்டியளித்து தொடர்பாக பல சர்ச்சைக கிளம்பியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் ஹரி-மேகன் தம்பதி ராஜ குடும்பத்திலிருந்து விலகியதால் அந்த பேட்டியில் என்னவெல்லாம் கூறினார்களோ? என்ற பதற்றம் அரண்மையில் நிலவியது.
இதற்கிடையே இதற்கு பதிலடியாக மகாராணியார் மற்றும் ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், ஹரி-மேகன் தம்பதியின் பேட்டி வெளியாகும் மார்ச் 7ஆம் தேதியன்று அவர்களின் உரையை அதே தொலைக்காட்சியில் வெளியிட முடிவு செய்தனர். இந்நிலையில் தற்போது ஹரி-மேகன் தம்பதி அளித்த பேட்டிக்கு ராஜ குடும்ப நிபுணர்கள் மற்றும் ராஜ குடும்பத்தின் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அதாவது மகாராணியாரின் கணவரான ஹரியின் தாத்தா, இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இப்பேட்டி அவசியமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. எனவே இந்த பேட்டியை சில நாட்களுக்கு பின் ஒளிபரப்புமாறு ஹரி-மேகன் தொலைக்காட்சி நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.