காங்கிரஸ் கட்சியானது டிரைவர் இல்லாத வாகனம் போல செயல்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா கூறியுள்ளார்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்த அறிக்கையாவது, “டிரைவர் இல்லாத வாகனமாக காங்கிரஸ் கட்சியானது தற்போது இருக்கின்றது. காரை எவ்விடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை குறித்து டிரைவருக்கு புலப்படவில்லை. மேலும் அக்கட்சிக்கு சரியான தலைமை இல்லை. தொடர்ந்து அமரீந்தர் சிங்கும் அவமானப்படுத்தபட்டு உள்ளார்.
கட்சியானது பஞ்சாப் தலைவராக சித்துவை நியமித்துள்ளது. அனைவருக்கும் சித்து எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது தெரிந்த விஷயமே ஆகும். மேலும் அமரீந்தர் சிங் ஒரு தேசபக்தர் ஆவர். இந்நிலையில் இவர் பாஜகவில் என்பது குறித்து என்னால் சரியாக கூற இயலாது. ஆனால் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்ககூடும்” என்று தெரிவித்துள்ளார்.