இங்கிலாந்து அரசு பெண்களின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது.
இங்கிலாந்து அரசு தற்போது பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனைக்கு தடை விதித்திருக்கிறது. இதன்படி, இனிமேல் மருத்துவமனையில் கன்னித்தன்மை பரிசோதிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது. மேலும் அதற்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல காலங்களாக பெண்கள், முதல் முறையாக உடலுறவு கொள்ளும் போது, இரத்தம் வெளியேறினால் தான் கன்னித்தன்மையுடன் இருப்பதாக கருதப்படுகிறது. உலக சுகாதார மையம் இது முழுவதும் தவறான கணிப்பு என்று கூறியிருக்கிறது. மேலும் இந்த பரிசோதனை முறைக்கு உலக சுகாதார மையம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்த பரிசோதனை பெண்களின் உடலில் காயத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது. சுமார் 20 க்கும் அதிகமான நாடுகளில் இவ்வாறான பரிசோதனை நடைமுறையில் இருப்பதை உலக சுகாதார மையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், இங்கிலாந்து அரசு இந்த பரிசோதனையை தடை செய்துவிட்டது. இதன் மூலம், பெண்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது.