உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பஞ்சாப் தவிர மீதமுள்ள நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது. இதுதொடர்பாக பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “பாஜக மீதும் பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை இந்த தேர்தல் முடிவில் பிரதிபலிக்கிறது. மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை இந்த தேர்தலில் தெளிவாக கூறியுள்ளனர்.
மக்கள் அனைவருக்கும் யார் தங்களுக்காக பாடுபட்டனர் என்பது நன்றாகவே தெரியும் எனவேதான் அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இந்த வெற்றிக்காக பாடுபட்ட கட்சியினருக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். காங்கிரஸ் கட்சியின் சிதைவு குறித்து இந்த தேர்தல் முடிவு செல்ல தெளிவாக விளக்கியுள்ளது.!” இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.