Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்போ நடப்பது சின்ன குஸ்தி சண்டை தான்…! அதிமுகவில் ஜாதி, மத, இன பாகுபாடு இல்லை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சாதி,  சமய,  இன வேறுபாடு என்றைக்கு பார்க்கப்பட்டிருக்கிறது ? ராமநாதபுரம் ஜில்லாவில் அருமை அண்ணன் சுந்தர்ராஜன் அவர்களை அமைச்சராகி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அழகு பார்த்தார், திருச்சியிலே தலித் எழுமலை அவர்களை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார், வாணியம்பாடியில் வடிவேலை நிறுத்தி வெற்றி பெற வைத்தார்கள், அமைச்சராகவும் உருவாக்கினார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்கே ஜாதி இருக்கிறது ? எங்கே மதம் இருக்கிறது ? எங்கே இனம் இருக்கிறது ? எல்லோரும் ஓர் ஜாதி. எல்லோரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் என்ற அந்த பாதையிலே தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 50 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறது. இப்போது ஒரே ஒரு கருத்து எளிமையாக சொல்லணும் என்றால் குஸ்தி சண்டை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்றைக்கு இருக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின் அவர்கள்….  அவர்தான் தலைமை என்று அறிவித்துவிட்டார்கள். நாம்  தலைமை என்று சொல்லி ரெண்டு பேரும் சண்டைக்கு போகிறார்கள்…. ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்று உங்களுக்கே தெரியும்?  இன்னொருவர் எப்படி மன வலிமையோடு அதை எதிர்கொள்வதற்கு….  குஸ்தி சண்டையை எதிர்கொள்வதற்கும் தயாராக இருக்கிறார் என்று தெரியும். ஆகவே தான் குஸ்தி சண்டைக்கு தயார் நிலையிலே தகுதி உள்ளவராக அண்ணன் எடப்பாடி அவர்களை ஒட்டுமொத்த தொண்டர்களும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கை குஸ்தி சண்டை தான்,  இது வேற வழியில்லை. இவர் மன உறுதியோடு இல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் பார்க்கிறோம், இவர் தான் மன உறுதியுடன் இருக்கிறார். நீங்கள் மோதவிட்டு பாருங்கள். அவர் வெற்றி பெற்று காட்டுவார். தொண்டர்களிடையே கௌரவத்தை மீட்டெடுப்பார், இன்றைக்கு காணாமல் போயிருக்கின்ற சிறப்பையும், வீரத்தையும் அவர் மீட்டெடுப்பார்.

மக்களின் ஆதரவு அவரிடத்தில் இருக்கிறது, தொண்டர்கள் ஆதரவு அவரிடத்தில் இருக்கிறது, நீங்கள் அனுதாபத்தை தேடி,  பிளவை ஏற்படுத்தி, மறுபடியும் தொண்டர்களை கஷ்டத்திற்கு ஆளாக்கி, துன்பத்திற்கு ஆளாக்கி எல்லாரையும் பிளவுபடுத்தி எல்லோர் மனதையும் வேதனைப்படுத்த வேண்டாம் என்பதை தாழ்மையோடு வேண்டுகோளாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |