Categories
மாநில செய்திகள்

இப்போ பேசக்கூடாது…! மக்கள் கேள்வி கேட்பாங்க…. அமைச்சர் எடுத்த முடிவு …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ராஜபாளையத்தில் புறவழிச்சாலையில் திட்டத்தோடு மாம்பழக்கூழ் தொழிற்சாலை வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதையெல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டும் பேசினால்… இப்ப வரைக்கும் என்ன செய்தார் ? என்று கேட்பார்கள்.

எப்பொழுதும் ஒரு உறவு முறையோடு ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகுதான் அந்த தொகுதி நம்முடைய செல்ல  குழந்தையாக, செல்லப்பிள்ளையாக நாம் பாவிக்க வேண்டியதிருக்கும். என்னதான் இதற்கு முன்னாடி ஆயிரம் கோடி ரூபாயக்கு  திட்டங்களை கொண்டு வந்தாலும், இனிமேல் கொண்டு வருகிற திட்டம் தான் பேசப்படும். இதுவரைக்கும் சொன்ன திட்டங்கள் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்.

இனிமேல் கொண்டுவரக்கூடிய திட்டங்கள் நீங்கள் பேசவேண்டும். என்னென்ன திட்டங்கள் ராஜபாளையத்திற்கு வேண்டும் என்பதை வரக்கூடிய பட்ஜெட்டில் பார்த்தால் ராஜபாளையம் பகுதிக்கு எல்லா  சிறப்பு மிக்க திட்டங்களையும் அறிவிப்போம். எல்லாம் அத்தனை திட்டங்களும் கொண்டுவந்து ராஜபாளையம் ஒரு வளமான தொகுதியாக மாற்றி காட்டுவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Categories

Tech |