வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியில் கூலித் தொழிலாளியான செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன், சஜின்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சஜின் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
அதற்கு புதிதாக வீடு கட்டியதால் பண நெருக்கடியில் இருக்கிறோம். சிறிது நாட்கள் கழித்து மோட்டார் சைக்கிள் வாங்கி தருகிறேன் என செல்வன் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சஜின் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஜினின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.