கடலூரில் பெண் ஒருவர் தான் திருநங்கை என்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே திட்டக்குடி சேர்ந்த தம்பதிகள் அசோகன் -செல்லம்மாள். இவர்களது மகள் அன்புச்செல்வி. இவர் தான் திருநங்கை என்பதை மறைத்து வெளிநாட்டில் வேலை செய்து வரும் செல்வம் என்பவரை கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து திருமணம் முடிந்தவுடன் அன்புக்கரசி தனது கணவரிடம் நான் 2 வருடம் மேற்படிப்பை முடித்துவிட்டு, விளையாட்டு பிரிவில் அரசு வேலை வாங்கிய பின்னர் நாம் இருவரும் சேர்ந்து தாம்பத்திய வாழ்க்கை ஈடுபடலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் மனைவியின் ஆசைக்கு மறுப்பு சொல்லாத கணவர் இரண்டு ஆண்டுகள் கழித்து அன்புக்கரசியிடம் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார். அப்போதுதான் அவருக்கு தனது மனைவி ஒரு திருநங்கை என்ற விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பெற்றோர் செல்வத்தை மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வம் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம் அன்புக்கரசிக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர் திருநங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து செல்வத்தை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அன்புக்கரசிக்கும், அவரது பெற்றோருக்கும் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.