Categories
உலக செய்திகள்

இப்போ 11 குழந்தைகள்… இன்னும் 105 குழந்தைகள் வேணும்… இப்படி ஒரு தாயா?… ஆச்சரியம்…!!!

Georgia நாட்டின் வசித்து வரும் பெண் ஒருவர் 11 குழந்தைகள் தற்போது உள்ள நிலையில் 105 குழந்தைகள் எனக்கு வேண்டும் என கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா என்பவரின் கணவர் கலிப் கோடீஸ்வரர். இவர்கள் தற்போது Georgia நாட்டின் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் இருக்கின்றனர். அதில் ஒரு குழந்தையை மட்டும் அவர்கள் பெற்றனர். மீதமுள்ள 10 குழந்தைகளும் வாடகை தாய் மூலமாக பெற்றெடுக்கப்பட்டது. இதுபற்றி கிறிஸ்டினா கூறுகையில், “எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். 105 குழந்தைகளை நான் வளர்க்க விரும்புகிறேன்.

தற்போது வரை ஒரு குழந்தை மட்டுமே நான் இயற்கையாக பெற்றெடுத்தேன். மீதமுள்ள குழந்தைகள் என் கணவரிடமிருந்து என்னிடமிருந்து மரபணு ரீதியாக வாடகைத் தாய் மூலம் பெற்ற எடுக்கப்பட்டது. இறுதியாக எனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் இத்துடன் நிறுத்துவதற்கு எந்த ஒரு திட்டமும் எங்களிடம் இல்லை. வாடகைத் தாய் மூலம் 10 குழந்தைகளை பெற்று எடுப்பதற்கு 8,000 யூரோக்கள் செலவானது” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |