மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி, சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் நாளை முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு செல்கின்றனர்.
இருப்பினும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் முன்வராமல் உள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி, சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் நாளை முதல் அனுமதி இல்லை என்றும், தடுப்புசி செலுத்தாத அரசு அலுவலர்களும் பணி செய்ய அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.